Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டொலர்களுக்கு விலைபோனதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு :கூட்டமைபினுள் உச்சமடையும் தனி நபர் முரண்பாடு

vikneswaransவடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில் சதி நடப்பதாகவும், உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தி தமது இந்த எண்ணத்தை நிறைவேற்றச் சிலர் துடிப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இச்சதிக்கு தமிழ்க் கூட்டமைப்பிற்குள் இருக்கும் சிலரையே அவர்கள் பாவித்து வருவதாகவும், இது புரியாது எம்மவர் சிலரும் அத்தீய எண்ணத்திற்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ பலிக்கடாவாகி வருவதாகவும் முதலமைச்சர் விக்னேஸ் வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தத் தீய எண்ணம் கொண்டவர்களின் மாயை வலைக்குள் எவ்வகையிலும் சிக்கிவிடாது தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள சகல தலைமைகளும் தமக்கிடையே ஒற்றுமையை மேலும் பலப்படுத்தி தமிழ் மக்களுக்கான சேவை எனும் உயரிய ஒரேயொரு சிந்தனைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தனது கருத்துக்கள், அறிக்கைகள் அல்லது உரைகள் எந்தவொரு தனிநபர் மீதும் கொண்ட காழ்ப்புணர்வினாலோ அல்லது ஒரு சிலர் போல பதவி ஆசையினாலோ தெரிவிக்கப்படுவது அல்ல. மாறாக மக்களுக்கான சேவை, தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையிலான ஒற்றுமை என்பவற்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையின் தமிழ் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக சில சக்திகள், தமிழ் சமூகத்தின் மத்தியில் டொலர்களை விநியோகிக்கின்றன என்றும் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழர் தலைமைத்துவத்தை மாற்ற நினைக்கும் இந்த சக்திகள், போருக்கு பின்னர் தமிழ் சமூகத்துக்கு எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. எனினும் தற்போது அந்த சக்திகள், பல்லாயிரம் டொலர்களை செலவழித்து தமிழ் தலைமைத்துவத்தை நிலைகுலைய செய்ய முயற்சிக்கின்றன.
எனவே தமிழ் மக்கள் இந்த சக்திகளுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
போர்க்குற்ற விசாரணையில் ஆரம்பித்து இன்று வரைக்கும் தமிழ்த் தலைமைகளே டொலர்களுக்கு மக்களை விலை பேசி விற்றன. மக்களை அணிதிரட்டி உலகம் முழுவதும் உரிமைக்காகப் போராடும் மக்கள் கூட்டங்களைப் போலன்றி டொலர்களுக்காக அரசியல் பேசி ஏகாதிபத்தியங்களின் ஒட்டுக்குழுக்களாக தமிழ் அரசியல் தலைமைகள் மாறிவிட்டன. இன்று விக்னேஸ்வரன் வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கு அப்பால் மக்களை சார்ந்த அரசியலை முன்வைத்தால் மாவை சேனாதிராசா போன்றவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். அரசியல்ரீதியான வேற்றுமைகளின்றி தனி நபர் பிரச்சனைகளாக முன்வைக்கப்படும் விவாதங்கள் புதிய மக்கள் சார்ந்த தலைமைகளை உருவாக்கமாட்டா

Exit mobile version