Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டேவிட் கமரன் யாழ்பாணத்தில் தொடக்கிய சினிமா முடிவிற்கு வருகிறது

David Cameron in Jaffnaஇலங்கையின் வடக்கில் இராணுவ ஆளுனருக்குப் பதிலாக சிவிலியன் ஆளுனர் நியமிக்கப்படதும், பாதுகாப்புப் படைகளிடமிருந்த நிலங்கள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதும், இராணுவக் குறைப்புச் செய்யப்பட்டிருப்பதும் மீள் குடியேற்றம் மேற்கொள்ளபடுவதும் மிகவும் முக்கியமான நடவடிக்கைகள் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார். தவிர, மைத்திரிபால சிரிசேன ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒருலட்சம் தமிழர்களைத் துடிக்கத்துடிக்கக் கொன்று போட்ட இனப்படுகொலைக்குத் தலைமை தாங்கிய மைகிந்த ராஜபக்ச அத்தனை சுக போகங்களுடனும் வாழ்ந்து வருகிறார். மகிந்தவுடன் இணைந்து இலங்கையைச் சூறையாடிய பலர் மேற்கு நாடுகளுக்கு எந்தத் தடையுமின்றி குடிபெயர்ந்து வருகிறார்கள். இராணுவக் குறைப்புச் செய்வதற்கு மத்திரி அரசு மறுத்து வருகிறது.

புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றவர்கள் இலங்கை செல்லும் போது கைது செய்யப்பட்டும் விசாரணை செய்யப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர்.

போர்க்குற்ற விசாரணைக்காக உள்ளகப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தப்படப் போவதாகக் கூறும் மைத்திரி அரசு அரசியல் கைதிகளையும் அப்பாவி மக்களையும் சித்திரவதைக் கூடங்களில் அடைத்து வைத்திருக்கிறது.
பிரித்தானிய அரசு தனது அடியாள் அரசை உருவாக்கிவிட்டதால் இலங்கையில் மனித உரிமை மீட்சி பெற்றுவிட்டதாகக் கூறுகிறது.

இலங்கையைச் சூறையாட மைத்திரிபால அரசு ஏகாதிபத்தியங்களுக்கு அத்தனை கதவுகளையும் திறந்துவிட்டிருக்கின்றது.

டேவிட் கமரன் யாழ்ப்பாணத்தில் காட்டிய சினிமா மத்திரியின் வருகையோடு முற்றுப் பெறுகிறது.

ஏகாதிபத்தியங்களின் பிடியிலிருந்து தமிழ்ப் பேசும் மக்கள் விடுவிக்கப்படும் வரை அழிவுகள் தொடரும்.

யாழ்ப்பாணத்தில் மக்களை மிரட்டிய டேவிட் கமரன் : சுதர்சன்
Exit mobile version