சீனாவிற்கு வர்த்தகப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் சீனாவுடன் வளர்ச்சிக்கும் மறுசீரமைப்பிற்குமான கூட்டிணைவை ஏற்படுள்ளதாகவும் சீனா பிரித்தானியாவின் நிராகரிக்க முடியாத பங்காளி நாடாக உருவாகியுள்ளதாகவும் கூறினார். மேலும் சீனாவின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உடன்படிக்கைக்கு தனது முழுமையான அரசியல் வலுவையும் பயன்படுத்துவதாகவும் பொது வாக்குறுதி வழங்கினார். சீனா தனது சொந்த நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி பிரித்தானிய மக்களுக்கு உலக மக்களுக்கும் வாய்ப்புக்களை வழங்குவதை தான் பார்க்கக்கூடியதாக உள்ளதாக டேவிட் கமரன் சீனாவில் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் 50 பில்லியன் பெறுமானமுள்ள அதிவேக ரயில் சேவைத் திட்டத்தில் பங்கெடுக்குமாறு சீனாவிற்கு அழைப்புவிடுத்தார்.
உலக வரைபடத்தில் தெளிவாகத் தெரியாத இலங்கையில் சீனாவின் தலையீட்டுக்கு எதிராக பிரித்தானியா போன்ற நாடுகளைப் பிடித்துவந்து ராஜபக்சவைத் தண்டிப்போம் என்று அப்பாவித் தமிழ் மக்களை ஏகாதிபத்திய அரசுகளின் அடிமைகளாக மாற்ற தமிழர் தலைமைகள் முனைகின்றன. நூறு பல்தேசியப் பெரு நிறுவனங்களோடு சீனாவில் சுற்றும் கமரனின் நோக்கம் மனித் உரிமையோ அன்றி மக்கள் பற்றோ அல்ல. தனது எஜமானர்களான பல்தேசிய நிறுவனங்களுகுத் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதே. 100,000 ஜகுவர் கார்களை விற்பனை செய்வதற்கான உடன்படிக்கை ஏற்கனவே சீன அரசுடன் கைச்சாத்தாகியுள்ளது.