டெல்லியில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் குடும்பத்தினரை சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு அவர்களுக்கு இலவசமாக வீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
டெல்லியில் மாணவி ஒருவர் ஆறு பேர் கொண்ட குமபலால் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டதில் அவர் பதிமூன்று நாட்கள் உயிருக்கு போராடி உயிரிழந்தார் ஏன்பது தெரிந்ததே. அதே வேளை ஜனவரி மாதம் 13ம் திகதி ஊடகங்களால் மறைக்கப்பட்ட மற்றொரு கோரம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் கூலித்தொழில் செய்யும் தனது கணவனுடன் இணைந்துகொள்வதற்காக் தனது 10 வயது மகனுடனுடனும் இரண்டு உறவினர்களுடனும் 32 வயதான ஏழைப் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணை காடையர் கும்பல் ஒன்று டெல்லியில் இரண்டு புகையிரத நிலையங்களிடையே இறக்கி கூட்டாக பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிவிட்டு அரை நிர்வாணமாக மரம் ஒன்றில் தொங்கவிட்டுச் சென்றிருக்கிறது.
டெல்லில் மாணவியின் குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கும் சோனியா, பத்துவயதுக் குழந்தையின் தாய் பட்டப்பகலில் கொல்லப்பட்டது குறித்து மூச்சுகூட விடவில்லை.