டெல்லியில் நேற்று 65வது குடியரசு தின கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், 21 குண்டுகள் முழங்க மூவர்ண தேசிய கொடியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றி வைத்தார். இதையடுத்து தேசியகீதம் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், இந்திய ராணுவத்தின் வலிமையை காட்டும் வகையிலான நிகழ்ச்சிகள், ராணுவ வீரர்களின் அணிவகுப்புகள், சாகசங்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை வெளிகாட்டும் வகையிலான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் இருந்து செங்கோட்டை வரை 8 கி.மீ. தொலைவுக்கு, ராணுவ தளபதி சுபரோ ட்டோ மித்ரா அணிவகுப்பை தலைமை தாங்கி நடத்தினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபி கலந்து கொண்டார். இவருடன் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலை வர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவு சின்னத்தில் உள்ள ‘அமர் ஜவான் ஜோதி‘க்கு பிரதமர், ராணுவ அமைச் சர் ஏ.கே. அந்தோணி மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்திய இராணுவம் தெற்காசியப் அரச பயங்கரவாதத்தின் ஊற்றுமூலம். இலங்கை உட்பட பல நாடுகளில் மக்களை அழித்துச்
இவை அனைத்தையும் பொருட்படுத்தாது, அலங்கரிக்கப்பட்ட குதிரை படையின் அணிவகுப்புடன் ஜப்பான் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ராஜபாட்டைக்கு சென்று ராணுவ வீரர்கள் மற்றும் அனைத்து பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள் ‘இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை‘ என்ற தலைப்பில் நடத்திய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்ª£ண்டனர். டெல்லி யில் கமாண் டோ, இந்தோ -திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் மற்றும் டெல்லி போலீசார் உள்ளிட்ட 25,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.