Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெல்றொக்சனைக் கொலைசெய்தவர்கள் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை : துணைக்குழுத் தலைவர்

நெருப்பு சுடும் எண்டு கைய விட்டுப் பார்த்தா தெரியவேணும் நெருப்புக்குள் கையை வைத்து தான் சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை எப்படி நியாயம் என்று சொல்ல முடியும். அது பிழை தான் அதற்காக யாரும் மன்னிப்பு கேட்க முடியாது. அத்துடன் மன்னிப்பை ஏன் கோர வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக தெரிவித்தார்.
வவுனியா சிறையில் நடைபெற்ற கலவரத்தையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்சன் ஆகியோர் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விசாரணையின்றி சந்தேகத்தின் பெயரில் சிறையில் அடைத்துவைக்கப்பட்ட ஒரு கைதியை அடித்துக் கொன்றவர்கள் தாம் செய்த கொலைக்கு மன்னிப்புக்கூடக் கேட்டக் கூடாது என்று டக்ளஸ் தேவாந்ததா கூறுகிறார். மக்கள் போராட்டம் ஒன்று இலங்கையில் எழுச்சி பெறுமானால் துணைக்குழு முன்னோடியான டக்ளஸ் தேவானத்தாவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

மக்கள் என்ற நெருப்பு சுடும் என்று தெரிந்தே டக்ளஸ் தேவானந்தா கையைமட்டுமல்ல உடலையே விட்டிருக்கிறார். அது சுடும் போது டக்ளஸ் தெரிந்துகொள்வார்.

Exit mobile version