இந்த நிகழ்வில் டெனிஸ் மக்களுக்கு டெனிஸ் மெரழியில் பல்கலைக்கழக மாணவர்களால் விளக்கம் அளிக்கப்பட்டதுடன், துண்டு பிரசுரங்கள் வழங்கி இலங்கை அரசின் தொடர்பாகவும் தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டனர்.
இனப்படுகொலை அரசிற்கு ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய அரசியல் கட்சிகளையும் அரசியல் வாதிகளையும் வாக்குப் பொறுக்கும் நோக்கத்தோடு முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் மேடையேற்றும் நிகழ்வுகளோடு ஒப்பிடும் போது டென்மார்க் பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடு முன்னோக்கிய பார்வைகொண்டதாக அமைகிறது.