Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெசோ மாநாடு : கருணாநிதி மாவை சந்திப்பு

தமிழகத்திற்கு தற்போது விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழகத்தின் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சென்னையிலுளள கருணாநிதியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மணி நேரத்துக்கு நீடித்த இந்தச் சந்திப்பின்போது சென்னையில் எதிர்வரும் 12 ம் திகதி நடைபெறவிருக்கும் ரெசோ மாநாடு தொடர்பாகவே முக்கியமாக ஆராயப்பட்டதாக ரைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ரெசோ மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல், அதில் ஆராயப்படவிருக்கும் விடயங்கள் என்பன தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.

ரெசோ மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்ளும் என்பதை மாவை சேனாதிராஜா இந்தச் சந்திப்பின்போது உறுதிப்படுத்தியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட பலர் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனைவிட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண, சிறிதுங்க ஜெயசூரிய உட்பட வேறு சில சிங்களத் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

விக்கிரமபாகு கருணாரட்ணவும் இதில் தான் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

கருணாநிதி அழிக்கப்படும் மக்களைப்பற்றிப் பேசுவதற்காக இதுவரை யாரையும் சந்திக்கவில்லை என்பது குறிக்கப்படாத தகவல்.

Exit mobile version