Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெசோ அடைப்பு – மாநிலம் முழுதும் மறியல் – யாருக்காக

arrestடெசோ அமைப்பின் சார்பில் நடந்து வரும் பொது வேலை நிறுத்தம் காரணமாக மாநிலம் முழுவதும் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி டெசோ அமைப்பின் சார்பில் தமிழகத்தில் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுவதும் பரவலாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வழக்கம் போல பஸ்கள், வாகனங்கள் இயங்கின. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. பஸ், ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக முன்னணி தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், எழும்பூர், பாரிமுனை, அண்ணாநகர் என பல முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டீ கடைகள், மளிகை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளிகள் வழக்கம் போல திறந்திருந்தன. போக்குவரத்து, மின்வாரியம், சிவில் சப்ளை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், கூட்டுறவுத் துறை, ரப்பர் தோட்ட கழகம், தேயிலை, தமிழ்நாடு செய்திதாள் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான தொமுச உறுப்பினர்கள் பணிக்கு செல்லாமல் பந்த்துக்கு ஆதரவு அளித்தனர்.

சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, சுப.வீரபாண்டியன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காலை 11.30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இணை கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர்கள் சுதாகர், பகலவன் ஆகியோரது தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்..
2009ம் ஆண்டு வன்னிப் படுகொலைகளின் போது இலங்கை அரசிற்கு ஆதரவாக நாடகமாடி ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்றுகுவிக்கத் துணைபோன திமுகவும், புலிகளைப் பயங்கரவாதிகளாக அறிவித்து ஆயிரக்கணக்கானோரைத் தமிழகத்திலேயே கைது செய்து சிறைப்பிடித்த தமிழின விரோதி ஜெயலலிதாவும், ஜெயலலிதாவின் விசிறி சீமானும், ராஜபக்சவோடு பொன்னாடை போர்த்திக்கொண்ட திருமாவளவனும், முத்துக்குமார் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து இனப்படுகொலையை விரைவுபடுத்திய வை.கோவும், நெடுமாறனும், தமது முற்றத்தில் வீழும் பிணங்களின் மேல் நின்று புலம்பெயர் பணத்திற்காக ஈழ உணர்வாளர்களாகும் குட்டிச் சாத்தான்களுக்க்ம் உயர் சீசனில் கடைவிரித்துள்ளார்கள். அழிவு குறித்து இவர்கள் அலட்டிக்கொள்ளப்ப்போவதில்லை.

Exit mobile version