வவுனியா சிறையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மஹர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான வவுனியாவைச் சேர்ந்த நிமலரூபன் கடந்த மாதம் 3ஆம் திகதி மரணமடைந்தார்.
டில்ருக்ஷன் இலங்கை அரச படைகளின் இரண்டாவது படுகொலை.
இன்று ராகம மருத்துவமனையில் மரணமானவர் 34 வயதான மரியதாஸ் நேவிஸ் தில்ருக்ஷன் எனவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நிராயுதபாணிகளான அரசியல் கைதிகளை அடித்தே கொல்லும் இலங்கை அரச படைகளும் அதனை நியாயப்படுத்தும் துணைக்குழுக்களும் வாக்குப் பொறுக்கும் மேட்டுக்குடி அரசியல் வியாபாரிகளும் ஈழத் தமிழர்களின் சாபக்கேடு.