Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டார்வின் மன்னிக்கட்டும்! : இங்கிலாந்து திருச்சபை வேண்டுகோள்!!

17.09.2008.

லண்டன்:
பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த மாபெரும் அறிவியலாளர் சார்லஸ் டார்வினிடம் இங்கிலாந்து திருச்சபை 150 ஆண்டுக ளுக்குப் பின் மன்னிப்பு கேட்கவுள்ளது என்று தி டெய்லி டெலிகிராப் கூறு கிறது. 

பரிணாமத்தத்துவம்  வெளி யானவுடன் மரபு ரீதியான கிறிஸ்தவ பழமைவாதிகள் அதைக் கடுமையாக எதிர்த் தனர். 1859-ம் ஆண்டில் டார்வின் இத்தத்துவத்தை வெளியிட்டார்.

17-ம் நூற் றாண்டில் பூமி உருண்டை என்று கூறிய கலிலியோவையும் திருச் சபைகள் கண்டித்ததுடன் மரண தண்டனையும் வழங் கின. டார்வினுக்கு மரண தண்டனை வழங்கப்பட வில்லை. ஆனாலும் படு மோசமாக விமர்சிக்கப் பட்டார்.

மிகைப்படுத்தப்பட்ட தற்காப்புடனும், உணர் வுகளால் உந்தப்பட்டும், டார்வினின் தத்துவத்தை திருச்சபை புறக்கணித்ததாக இங்கிலாந்து திருச்சபை ஏற்றுக் கொள்ளும். பரிணா மத் தத்துவ எதிர்ப்பு திருச் சபைக்கு ஏற்பட்ட களங்கம் என்றும் அது கூறும். எனினும் கர்த்தர் பூமியையும் மனிதனையும் படைத்தார் என்று இன்றும் நம்பும் பழமைவாதிகளின் ஆத் திரத்தை இவ்வொப்புதல் கிளப்பி விடக்கூடும்.

இங்கிலாந்து சபையின் நற்செய்தி மற்றும் பொதுத்தொடர்பு இயக்கு னர் ரெவ.டாக்டர். மால்கம் பிரவுன் மன்னிப்புக் கடி தத்தை தீட்டியுள்ளார்.

மன்னிப்பு கடிதத்தில் 17-ம் நூற்றாண்டில் கலிலி யோ வுக்கு இழைத்த தவறை மீண்டும் 19-ம் நூற்றாண்டில் செய்தது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

“சார்லஸ் டார்வின், நீங்கள் பிறந்து 200 ஆண்டு கள் கழித்து இங்கிலாந்து திருச்சபை உங்களிடம் மன் னிப்பு கேட்கிறது. எங்க ளுடைய முதல் எதிர்வினை தவறானது.

உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ள அது உதவியது. நம்பிக்கை புரித லைத் தேடுகிறது என்ற பழைய மாண்புகளை நாங்கள் கடைப்பிடிக்க முயல்கிறோம்.

இது தவறைத் திருத்தும் என்று நம்புகிறோம்” என்று மன்னிப்பு கடிதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது

Exit mobile version