இதுதொடர்பாக சிங்கள வார இதழான ராவய பத்திரிகைக்கு செவ்வியளித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தாவின் செயலாளர் நெல்சன் ஏதிரிசிங்கம், ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி ஆதரவளித்த ஜனாதிபதி வடக்கின் பெரும்பாலான மக்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் அர்த்தமில்லையென்பதால் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட அமைச்சர் தீர்மானித்ததாகக் கூறியுள்ளார்.
அத்துடன் டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருந்ததாகவும் மக்களின் வேண்டுகோளுக்கமைய அந்தத் தீர்மானத்தைக் கைவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதன் பின்னரே அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தமை நினைவுட்டத்தக்கது.