ஈ.பி.டி.பி.யின் தலைவரும், சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு வீசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளதாக பிரபல ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 63 ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இராஜதந்திர குழுவில் அமைச்சர் தேவானந்தாவும் இடம்பெற்றிருந்தார்.
எனினும், அமைச்சரின் வீசா விண்ணப்பப்படிவத்தை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருப்பதனால் அமைச்சரது வீஸா நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக அமைச்சர் தேவானந்தாவினால் இந்த பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.