Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டக்ளஸ் தேவனந்தா – சென்னைப் போலீசுக்குச் சிக்கல்.

சென்னை சூளைமேட்டில் கொலை வழக்கு உள்ளிட்ட குழந்தைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யும் கோரிக்கை தமிழகத்தில் வலுத்திருக்குறது. இன்று சென்னை செய்தியாளர்களிடையே சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பேசும் போது டக்ளஸ் தேவானந்தா மீதான கிரிமினல் வழக்குக் குறித்தும் அதன் மீதான நடவடிக்கை குறித்தும் கேட்கப்பட்டது. அப்போது ஒரே ஒரு வரியில் பதிலளித்த சென்னை கமிஷனர். ” அவர் மீதுள்ள வழக்குகள் தொடர்பாக டில்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம், மற்றபடி இது குறீத்து இதற்கு மேல் பேச முடியாது” என்று மட்டும் சொன்னார் இந்நிலையில், இந்தியா தன்னை மன்னித்து விட்டது என்று டில்லியில் நின்றூ கொண்டு பேசிய டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு  எப்படி இந்தியாவுக்குள் அனுமதித்தீர்கள் என்று கேட்டும். சென்னையில் உள்ள கொலை வழக்கிற்காக அவரை கைது செய்து சென்னை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவசரத் தந்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளனர். இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் அந்நியக் குடிமகன் ஒருவர் வேற்று நாடொன்றில் கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் போது அவர் மீண்டும் அந்நாட்டுக்கு வருவது குடிவரவு விதிகளுக்கு முரணானது. சட்டத்தின் படி சென்னைக் கமிஷனர் குடிவரவு அதிகாரிகளுக்குத்தான் கிரிமினல் குற்றம் புரிந்து டக்ளஸ் தேவானந்தா பற்றி தகவல் தந்திருக்க வேண்டுமே தவிற டில்லி போலீசுக்கல்ல, தேடப்படும் குற்றவாளியை என்ன காரணத்திற்காக இந்தியாவுக்குள் அனுமதித்தீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது. குடிவரவு அதிகாரிகளும், சென்னை போலீசாரும்தானே தவிற டில்லி போலீஸ் அல்ல, என்பதோடு வழக்கறிஞர்கள் தந்திகளை அனுப்புவதால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எத்தைகைய பாதிப்புகளும் இல்லை. இந்தியா அவரை பத்திரமாக பாதுகாக்கும் ஆனால் சென்னை போலீஸ் கமிஷனருக்கு இது சட்ட ரீதியாக பல் வேறு சிக்கல்களைத் தோற்று விக்கிறது.

Exit mobile version