Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஞானசார தேரருக்கு விசா மறுக்கப்பட்டது:அமெரிக்காவின் நாடகம்

bodu bala senaபொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரரின் வீசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வாய் மொழி மூலமாக வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதனை அறிவித்துள்ளதாக இயக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய வீசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டில் ஞானசார தேரர் பல் தடவைகள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான ஐந்தாண்டு வீசாவினைப் பெற்றுக் கொண்டதாகவும், 2013ம் ஆண்டில் எவ்வித பிரச்சினையும் இன்றி அமெரிக்காவி;ற்கு பயணம் செய்ததாகவும் விதானகே குறிப்பிட்டுள்ளார்.
வீசா பிரச்சினை குறித்து அமெரிக்கத் தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொது பல சேனா அமைப்பு அமெரிக்காவில் தன்னார்வ நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்பதிவை அமெரிக்க அரசு மீளப்பெற்றுக்கொள்வது அமரிக்க அரசைப் பொறுத்தவரை கடினமான ஒன்றல்ல. இன்று அமெரிக்காவின் புதிய அரசியல் சிதைப்பு நடவடிகைகள் சிக்கலானவை. தனது நண்பர்களை உருவாக்குவதும் அவர்களின் எதிரிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதையுமே அமெரிக்க அரசு தனது புதிய தந்திரோபாயமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தனது நட்பு வட்டத்திற்குள் பொதுபல சேனாவிற்கு நிதியுதவியை வழங்குவதும் அதற்கு எதிரானவர்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக பொதுபல சேனாவிற்கு எதிரானவர்கள் போல நாடகமாடுவதும் அமெரிக்க அரசின் புதிய அரசியல் தந்திரோபாயம்.

அமெ­ரிக்­கா­விற்கு விஜயம் மேற்­கொள்­ளு­வ­தற்­காக எனக்கு வழங்­கப்­பட்ட விசா ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­மை­யா­னது பெரிய விட­ய­மல்ல எனத் தெரி­வித்த பொது பல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், உண்­மை­யான பயங்­க­ரா­வா­திகள் யாரென்­பதை அமெ­ரிக்கா விரைவில் புரிந்து கொள்ளும் என்றும் தேரர் தெரி­வித்தார்.

Exit mobile version