Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜோர்ஜ் புஷ் மற்றும் பங்காளர்கள் போர்க்குற்றவாளிகள் : குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு

சித்திரவதை, சர்வதேச போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னை நாள் அமரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ், முன்னைனாள் அமரிக்க உதவி ஜனாதிபதி ரிச்சாட் சின்னே, பாதுகாப்பு செயலர் ரொனால்ட் ரொம்ஸ்பெல்ட், ஜனாதிபதியின் ஆலோசகர் அல்பேர்டொ கொன்செலஸ், உதவி அதிபரின் ஆலோசகர் டேவிட் அடிங்டன், பாதுகாப்புச் செயலரின் ஆலோசகர் வில்லியம் ஹெனெஸ், சட்ட ஆலோசகர் ஜே பைபீ, உதவி சட்ட ஆலோசகர் ஜோன் சூன் ஜூ, ஆகியோர் சரவதேச போர்க் குற்றவாளிகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான சித்திரவதையாளர்கள் எனத் தீர்ர்பு வழங்கப்பட்டுள்ளது.
அப்பாஸ் அபிட், மொசாம் பெக், ஜமீலா ஹமீடி ஆகியோரின் நேரடிச் சாட்சியங்களின் அடிப்படையிலும் ஏனைய சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையிலும் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனத் தீர்க்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் கோலாலம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இத் தீர்ப்பு உலக மக்கள் மத்தியில் அமரிக்காவிற்கு எதிரான அபிப்பிராயத்தைத் தோற்றுவிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தவிர ஈராக்கிய பிரஜை அலி ஷலால், பிரித்தானியப் பிரஜை ராகுல் ஹமீட் ஆகியோரின் சட்டரீதியான அறிவிப்புக்களும் கருத்தில் எடுக்கப்படு மலேசிய குற்றவியல் நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தொழில் நுட்ப மற்றும் விஞ்ஞான அமைச்சின் முதன்மைப் பொறியியலாளரான அப்பாஸ் அபிட் இன் கை நகங்கள் பிடுங்கப்பட்டுள்ளதைக் காண்பித்துள்ளார். இதே போன்று ஏனையோரும் தமக்கு எதிரான கொடுமையான சித்திரவதைகளைக் காண்பித்தனர்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்ற தலையங்கத்தில் நடத்திய ஆக்கிரமிப்பின் போதே மேற்குறித்தோரின் கட்டளையின் அடிப்படையில் இந்த குற்றங்கள் இழைக்கப்படுள்ளதாக குறிப்பிட்டப்பட்டது.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஆகியவற்றை போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்ககுமாறு கோரியுள்ளதாக மலேசிய குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

Exit mobile version