ஜே.வி.பி கட்சி ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சி செய்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இவ்வாறான சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் சக்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயங்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவினர் இந்த சதி முயற்சிகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்ட்டப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக வலய மோதல்களின் போது குண்டர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட ரொசான் சானக்கவின் இறுதிக் கிரியைகளின் போதும் சிலர் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்த போதிலும், ஊழியர்கள் புத்திசாதூரியமாக செயற்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது