Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜோர்ஜீயா ஜனாதிபதி வெளியேறவேண்டும் : ரஷ்யா எச்சரிக்கை

தெற்கு ஓசெட்டியா மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் அப்பாவி மக்களை குண்டு வீசி படுகொலை செய்த குற்றத்திற்கு பொறுப் பேற்று ஜார்ஜியா ஜனாதி பதி மிகயீல் சாகஸ்விலி உட னடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது.

முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளில் ஒன்று ஜார்ஜியா. ரஷ்யாவின் அண்டை நாடான இங்கு, அமெரிக்கக் கைக்கூலியான மிகயீல் சாகஸ்விலி ஜனாதி பதியாக உள்ளார். இந்நாட் டின் தெற்குப் பகுதியில், ரஷ்யாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது தெற்கு ஓசெட்டியா மாகா ணம். 80 சதவீதத்திற்கும் அதிகமாக ரஷ்ய இன மக் களே வாழும் இம்மாகா ணம், ஜனாதிபதி ஷாகஸ் விலியின் ஆட்சியை ஏற்க மறுத்து வந்தது.

இந்நிலையில், ஓசெட் டியா மாகாணத்தின் மீது ஜார்ஜியா ஜனாதிபதி சாகஸ்விலியின் உத்தர வுப்படி, ராணுவத்தினர் ஆகஸ்ட் 8 அன்று அதிரடித் தாக்குதல் நடத்தினர். ராணுவ விமானங்கள் சர மாரியாக குண்டு வீசியதில், சுமார் 2 ஆயிரம் அப்பாவி ரஷ்ய மக்கள் கொல்லப்பட் டனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிக ளாகினர். இதனால், ரஷ்யா வெகுண்டெழுந்தது.

ஓசெட்டியாவை தாக் கிக் கொண்டிருந்த ஜார் ஜியா ராணுவத்தினர் மீது, ரஷ்யப் படையினர் அதிரடி யாக தாக்குதல் நடத்தி, ஜார் ஜிய ராணுவத்தினரை ஓட ஓட விரட்டினர். இந்நிலை யில், ரஷ்யா தனது பதி லடியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், ஐ.நா. சபை என பல தரப்பினரும் வேண்டு கோள் விடுத்தனர்.

ஓசெட்டியா மாகாணத் தின் அப்பாவி மக்களை, ஜார்ஜியப் படைகள் கொன்று குவித்த போது, அமெரிக்காவும் பிரான்சும் மவுனமாக இருந்தன என் பது கவனிக்கத்தக்கது. இந் நிலையில், தெற்கு ஓசெட் டியா மாகாண மக்களை படுகொலை செய்ததற்கு பொறுப்பேற்று, ஜார்ஜியா ஜனாதிபதி மிகயீல் சாகஸ் விலி உடனே பதவி விலக வேண்டுமென்று ரஷ்ய அயல்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் கூறியுள்ளார்.

மேலும், தெற்கு ஒசெட் டியாவை விட்டு ஜார்ஜியப் படைகள் விலகி இருப்பதே நல்லது என்றும் அவர் எச் சரித்துள்ளார். இதனி டையே, மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொள்ள வுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி ரஷ்யாவுக்கும், ஜார்ஜியாவுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கப் போவதாக கூறி யுள்ளார். ஆனால் அதை ரஷ்யா நிராகரித்து விட்டது.

Exit mobile version