ஜெயலலிதாவின் கார் தங்களை கடந்து சென்றபோது, அவர்கள் ‘அம்மா வாழ்க’ ‘அம்மா வருக… எங்கள் அம்மா வருக… வருக…’ என்று விண்ணதிர முழக்கமிட்டனர். வறுமை தின்ற நாட்டில் மக்களின் எச்சங்களையும் கொள்ளையிட்டு ஊதாரித்தனமாக வாழ்க்கை நடத்திய ஜெயலலிதாவை மக்களுக்குக்காகப் போராடிய தியாகி ஒருவரை வரவேற்பது போன்ற பிரமாண்ட்டமான வரவேற்பு தமிழ் நாட்டின் அவமானம்.
போயஸ் கார்டனில் உள்ள, ஜெயலலிதா வீட்டில் இருந்து, 100 மீட்டர் தூரத்தில், அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தனர்.கொட்டும் மழையில், தொண்டர்கள் நனைந்தபடிநின்றனர். ஜெயலலிதா வந்ததும், அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர் கார், கார்டனுக்குள் நுழைந்ததும், காரை பின்தொடர்ந்து, தொண்டர்கள் செல்ல முயன்றனர்.
அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்தனர். போலீசாரை தள்ளிவிட்டபடி, தொண்டர்கள் நுழைய முயற்சிக்க, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொண்டர்கள் அத்து மீறியதால், போலீசார் ஒன்று திரண்டு, அவர்களை,அங்கிருந்து அகற்றினர்.