14 வருடங்களாக பெங்களூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இதுவரை ஒருமுறை கூட ஜெயலலிதா ஆஜராகவில்லை. நேற்றுதான் அவர் முதல் முறையாக ஆஜரானார்.
முற்பகல் 11 மணியளவில் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்பு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் ஆஜரானார்கள். ஜெயலலிதாவிடம் நீதிபதி மல்லிகார்ஜுனய்யாமற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர் 380 கேள்விகளைக் கேட்டு ஜெயலலிதாவிடமிருந்து பதில்களைப் பெற்றுப் பதிவு செய்தனர். பின்னர் ஜெயலலிதா கிளம்பினார்.
அதன் பின்னர் விமான நிலையம் வந்த ஜெயலலிதா, அங்கிருந்து தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை திருப்பினார். இன்று மீண்டும் அவர் விமானம் மூலம் பெங்களூர் வருகிறார்.
இன்றைய விசாரணையில் அவரிடம் மேலும் 100 கேள்விகள் வரை கேட்கப்படவுள்ளது. இதற்காக அவர் நேரில் ஆஜராகிறார். ஜெயலலிதாவிடம் கேள்விகள் கேட்டு முடித்த பின்னர் அவரது தோழி சசிகலா மற்றும் சசியின் உறவினர் இளவரசி ஆகியோரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தி கேள்விகளைக் கேட்கும்.