நக்கீரன் அலுவலகம் பல முறை தாக்குதலுக்கு உள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இருக்கும் நக்கீரன் தலைமை அலுவலகத்தை அதிமுகவைச் சேர்ந்த வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் கே அசோக் வெளிப்புறமாக பூட்டியதாகவும் அவருடன் வந்தவர்கள் நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தவிர ஜெயலலிதா ஆதரவாளர்களால் நக்கீரன் இதழ் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் எரியூட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஜெயலலிதா மாட்டிறைச்சி உண்பதாக நக்கீரன் இதழில் எழுதப்பட்டிருந்ததே ஜெயலலிதா குழுவினரின் வன்முறைக்குக் காரணம் எனத் தெரியவருகிறது.
நக்கீரன் வியாபரப் பத்திரிகை என்பது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் ஜெயலலிதாவின் ஊடக சுந்ததிரத்திற்கு எதிரான பாசிசம் அபாயகரமானது. இலங்கையில் மகிந்த ராஜபக்ச அரசின் ஊடக அடக்குமுறையை ஒத்ததான இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வை உருவாக்கியுள்ளது.