பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிப்பட்டதே போதுமானதாகும் என்று கூறிய பாண்டியன், அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை என்றும் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டிய முழுபொறுப்பும் மத்திய அரசின் கையில் தான் உள்ளது என்றும் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று கூறிய பாண்டியன், தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வந்தவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை தொடங்கும் என்றார்.