Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெயலலிதாவைப் பாராட்டி பழ.நெடுமாறன் மீண்டும் அறிக்கை

தமிழக் முதல்வருக்கு ஈழ ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் பழ.நெடுமாறன் மீண்டும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவில் அதிமுக இடம்பெறாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற வேண்டிய பல கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை.
எடுத்துக்காட்டாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா புறக்கணிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ள பலரும் அரசின் நிலைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள். குழுவின் தலைவராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பெரும்பான்மையினரை மீறி எதுவும் செய்ய இயலாது என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகச் செல்லும் இந்தக் குழுவில் அதிமுக இடம்பெறாதது தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தைப் பிரதிபலிப்பதாகும் என்று அவர் கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களின் நண்பர்களான ஒடுக்கப்படும், அழிக்கப்படும்,போராடும் தமிழக மக்களின் எதிரியாக வெளிப்படையாகவே தன்னைக் காட்டிக்கொள்ளும் ஜெயலலிதாவை ஆதரிக்கும் இவ்வாறான அறிக்கைகள் ஆபத்தானவை. ஈழத் தமிழர்களை அவர்களின் ஆதரவாளர்களான ஒடுக்கப்படும் மக்களிலிருந்து அன்னியப்படுத்தும் செயற்பாடு. நெடுமாறன் போன்றோரின் முட்டாள் தனமான செயற்பாடுகளால் பல அழிவுகளைச் சந்திருக்கும் ஈழத் தமிழர்கள் இவர்களை இனம்கண்டுகொள்ளும் மாற்றத்திற்கான காலம் இது.

Exit mobile version