இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த மக்கள் நலப் பணியாளர்கள் ஏறத்தாழ 13 ஆயிரம் பேர் எந்தவிதக் காரணமுமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் ஆணவ ஆட்சியைக் கண்டித்து வரும் 15ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னையில் தி.மு.க பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு மின்னிலையத்தை மூடக் கோரும் மக்கள் போராட்டங்கள் குறித்து ஆட்சி இழப்பின் பின்னர்கூட காப்ரட் கட்சியான தி.மு.க கவலை கொண்டதாகத் தெரியவில்லை.