
மேற்படி மாநாட்டிற்குத் தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரசன்னமாகி இலங்கையில் தமிழ் மக்கள் மீது இறுதி யுத்த காலப்பகுதியில் மட்டுமல்ல அதற்கு முன்னரான 60 ஆண்டுகளாக போர்க்குற்றங்களும் மனித்தத்துவத்திற்கு எதிரான குற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனையும், அவை வெறும் போர்க் குற்றங்கள் மட்டுமல்ல திட்டமிட்ட இனஅழிப்பு என்பதனை பதிவு செய்திருக்க வேண்டும்.
சர்வதேச நாட்டு இராஐதந்திரிகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆலோசனை கூறினார்கள் என்ற காரணம் காட்டி கூட்டத்திற்கு செல்வதிலிருந்து கூட்டமைப்பு விலகிக் கொண்டமை தமிழ் மக்களது நலன் அடிப்படையில் அல்லாமல் பிறசக்திகளது நலன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முடிவாகவே கருதவேண்டியுள்ளது. பிறநாடுகள் எப்போதும் தமது நலன்களை முன்னிலைப்படுத்தியே தீர்மானங்களை மேற்கொள்ளும் என்பது வரலாறு. இதுவரை காலமும் தமிழ் மக்களது பிரச்சினையில் தலையிட்ட நாடுகள் தமிழ் மக்களை தமது நலன்களை அடைந்து கொள்வதற்காகவே பயன்படுத்திவந்துள்ளன என்பதும் கூட்டமைப்பினருக்குத் தெரியாத ஒன்றல்ல. இந்த சந்தற்பத்தில் கூட்டமைப்பினர் தமிழ் மக்களது நலன் அடிப்படையில் சிந்தித்திருந்தால் நிச்சயம் nஐனீவா சென்று தமிழர் தரப்பு நிலைப்பாட்டை ஆணித்தரமாக பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதாவது தமிழ் மக்கள் மீது கடந்த அறுபது ஆண்டுகளில் புரியப்பட்ட இனஅழிப்புத் தொடர்பாக பூரணமான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்க வேண்டும்.
சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நியாயம் பெற்றுக் கொள்ளுவதற்கு தமிழ்த் தரப்பிற்கு கிடைத்த முக்கயமாகதொரு சந்தர்ப்பத்தினை உரிய முறையில் பயன்படுத்தாது தவிர்த்துக் கொண்டதன் மூலம் தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்டவர்கள் சர்வதேச விசாரணை ஒன்றில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவி புரிந்துள்ளனர்.