Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெனீவா மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது : இனப்படுகொலைக்கு அங்கீகாரம்

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையகத்தின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது. இந்தியாவில் தங்கியிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கொழும்பில் தங்கியிருக்கும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் ஆலோசனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அமரிக்க மற்றும் இந்தியத் தூதரகங்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவரும் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இந்த முடிவிற்கு வருவதற்கான காரணங்கள் இலங்கை, இந்திய மற்றும் அமரிக்க அரசுகளின் அழுத்தங்களே காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
மனித உரிமை ஆணையகம் எந்த முடிவையும் எப்போதும் மேற்கொள்வதில்லை. அது கருத்துக்களை மட்டுமே வெளியிட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆணையகம் மட்டுமே செயற்திட்டங்களை முன்வைக்க முடியும்.
இலங்கை அரசிற்கும் பேரினவாதத்திற்கும் இனப்படுகொலைக்கும் எதிரான பொது அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தக் குறைந்தபட்ச அரச எதிர்ப்பு நிலையக் கூட முன்னெடுக்கத் தயாரற்ற நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற பாரளு மன்ற சந்தர்ப்ப வாதிகளை நிராகரித்து மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்குவதும், புதிய அரசியல் தலைமையை உருவாக்குவதும் அவசியம் என்பதை நடைமுறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்த்தியுள்ளது.

Exit mobile version