கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை தாம் பாராட்டுவதாக தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் வெளிவிவகார பிரதியமைச்சர் மேரியஸ் பிரான்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
19வது மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் விலி சோவன்டால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த, ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கையை அக்கறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமரிக்க ஏகாதிபத்தியத்தின் தெற்காசியப் பிரதிநிதி தெரிவித்திருந்தது போன்று இதுவரை இலங்கை அரசோடு பேரம்பேசும் நிலையே காணப்படுகிறது