Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெனீவா தீர்மானங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலங்கை அரசு பயன்படுத்தும் : ஜே.வி.பி

Anura_Kumara_JVPஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலங்கை அரசாங்கம் பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்த அமர்வுகளை மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் எந்தவொரு நாட்டினாலும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதனை தெரிந்து கொண்டே அரசாங்கம் இவ்வாறு வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ரோமப் பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால் எந்தவொரு நாட்டினாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலி மார்க்சிச முழக்கங்களை முன்வைக்கும் இனவாதக் கட்சியான ஜே.வி.பி இன் இக் கூற்று நியாயமானதே. இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ராஜபக்சவைப் பாதிப்பதில்லை. ராஜபக்ச அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது திட்டமிட்ட இனக் கொலையை நடத்தும் அதே வேளை அப்பாவி சிங்கள உழைக்கும் மக்களை அழிவின் விழிம்பில் இழுத்துவந்திருக்கிறது. ராஜபக்ச குடும்பம் தண்டிக்கப்படுவது மக்களின் போராட்டங்கள் ஊடகவே சாத்தியமானது. மக்கள்சார்ந்த புரட்சிகர அரசியல் இயக்கம் கட்டியெழுப்ப்படுவதன் ஊடாகவே ராஜபக்சவைத் தூக்கிலிட முடியும்.

Exit mobile version