இனப்படுகொலை அரசான இலங்கை அரசு தானே உருவாக்கிக்கொண்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அமரிக்கா ஜெனிவாவில் தீர்மனம் நிறைவேற்றியது. அதன் பின்னர் இலங்கை அரசிற்கு ஆயுதங்கள் விற்கத் தயார் என அறிவித்தது. இந்த வெற்றுத் தீர்மானத்தின் விளைவுகளைப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை அரசு தான் அமரிக்காவிற்கு எதிராகப் போராடுவதாகக் கூறி தனது பொருளாதாரப் பிரச்சனைகளை மூடிமறைத்து மக்களை மாயைக்குள் வைத்திருக்கின்றது.
இதனை தமது பிழைப்புவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்ட புலம்பெயர் அமைப்புக்கள் உலகக் கொலைகார அரசான அமரிக்காவுடன் இணைந்து செயற்படுமாறு மக்களை ஏமாற்றுகின்றனர். இது வெற்றுத் தீர்மானம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ராஜாபக்சவிற்கு கடித மூலம் தெரிவித்துள்ளார். அதன் சாராம்சத்தில் கூறப்பட்டுள்ளது:
சுமூகமான தீர்வை எட்ட இலங்கை பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுமாறு பிரதமர், இந்திய பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சமநிலையானதும், வெற்றிகரமானதுமாக அமைய இந்தியா முழு அளவில் முயற்சி எடுத்துக் கொண்டதாக மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்துவதற்கு இலங்கை காண்பித்து வரும் முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.