இலங்கை மக்கள் மீது குடும்ப சர்வாதிகாரத்தை உலக நாடுகளின் ஆதரவோடு பிரயோகித்துவரும் ராஜபக்ச பாசிச அரசோ, தேசிய இனப் பிரச்சனையையை அரசியல் வியாபாரத்திற்காகப் பயன்படுத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இப் பேச்சுவார்த்தை குறித்த விபரங்களை இதுவரை வெளியிடவில்லை.
சவேந்திர சில்வாவை ஐ.நா அமைதிப்படையின் உயர்மட்ட ஆலோசகராக நியமித்துள்ள அமரிக்க சார்பு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்பாக புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கை அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளன. ஜெனிவாவில் இம்மாதம் 27 ம் திகதி நடைபெறும் இந்த ஆர்பாட்டம் வழைமை போல மற்றொரு ஆர்ப்பாட்டமாகவே கருதப்படுகிறது.மேற்கு நாடுகளின் பெரும்பான்மை மக்களின் ஒரு பகுதியினருனாவது இணைந்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தொடர்ச்சியான இலங்கை அரசு போன்ற அரசுகளுக்கு வழங்கப்படும் ஆதரவிற்கு எதிரான போராட்டங்கள் இதுவரை திட்டமிடப்பட்டதில்லை.
இலங்கையின் மீது அழுதங்களைப் பிரயோகிக்கும் மேற்கு தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொண்ட பின்னர், போர்க்குற்றங்களை இலங்கை அரசே விசாரணை செய்ய வேண்டும் என இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்வு கூறப்படுகின்றது.
வன்னியில் நேரடியாகக் கொலைக் குற்றங்களில் ஈடுபட்ட சவேந்திர சில்வாவை விசாரணை செய்ய முடியாத அளவிற்கு உயர் பதவியில் அவர் நியக்மிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய நாடுகள் வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் ஏற்கனவே ஏமாற்றப்பட்டுள்ள ஏனைய நாடுளைச் சேர்ந்த மக்களுடனான பொது உடன்பாட்டிற்கு வருவதனூடாகவே அழுத்தங்களை வழங்க முடியும் என்பதை இலங்கை அரசு திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் வழங்கிய ஆதரவின் பின்னரும் புலம்பெயர் அமைப்புக்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றன.