Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெகத் கஸ்பர் புலத்து மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

சமீபகாலமாக கருணாநியின் ஆதரவு ஊடகமான நக்கீரன் இதழில் மறக்க முடியுமா என்னும் பெயரில் தொடர் எழுதிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவப் பாதிரியான ஜெகத் கஸ்பர் ஈழ மக்களுக்கு தற்போது தலைமை இல்லை என்றும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு வீச்சோடு புலம் பெயர் மக்களின் நிதி உதவியோடு நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதி வருகிறார். இந்த நபரின் காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தொடர்புகளும், அது எப்படி புலிகளை கடைசி நேரத்தில் கழுத்தறுத்தது என்றும் தொடர்ந்து தமிழகத் தோழர்கள் இவரை அம்பலப்படுத்தி எழுதி வருகிறார்கள். இறுதிப் போரின் போது புலிகளை சரணடைய வைத்துக் கொன்றது. சென்னை சங்கமம் என்ற பெயரில் பெரும் பண்க்கொள்ளை என்று இவரின் போக்கிரித்தனமான பண வெறியும் அதற்கான உளவு வேலைகளும் தொடர்ந்து வந்தாலும் இவர் மீண்டும் மீண்டும் ஈழம் என்பதை குறிவைக்கிறார். காரணம் ஈழ மக்களுக்கான ஒரே நிதி உதவி ஆதாரமாக இருக்கும் புலத்து மக்களை நிவாரணம் என்ற பெயரில் ஒருங்கிணைத்து பெரும் பண வசூலை போடத்தான் என்று தகவல்கள் தெறிவிக்கின்றன. தமிழகத்தின் பிரபலாமான புலி ஆதரவு இயக்குநர் ஒருவரோடு சேர்ந்து இதே விதமான நிதி திரட்டலுக்கு ஜஸ்டிஸ் ஃபண்ட்என்ற பெயரில் நிதி திரட்டலாம். அதற்கு அந்த இயக்குநருக்கு ஈழ மக்களிடம் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தலாம் என்று இவர் முயன்றிருக்கிறா. அந்த இயக்குநர் சிறையில் இருந்த தருணத்தைப் பயன்படுத்தி அவரது நெருங்கிய புலி ஆதரவாளர்களிடம் இந்த பாதிரி வசூலைத் தொடங்க முயர்சித்திருப்பதும் தெரியவருகிறது. இப்போது தானும் ஏற்கனவே புலத்தில் புலிகளுக்காக வசூலிக்கிறோம் என்று வயிறு வளர்த்த வசூல் ராஜாக்கள் சிலருடன் சேர்ந்து ஈழ மக்களுக்கான நிவாரணம் என்ற பெயரில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தப் பாதிரி களம் இறங்குவார் என்று தெரிகிறது. அன்பார்ந்த புலத்து மக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் ஈழத்தில் துயரப்பட்டு நிற்கும் மக்களுக்கு உதவும் கடமை உண்டு. ஆனால் அதை எந்த தன்னார்வக்குழுக்கள் மூலமாகவோ, இம்மாதிரி மோசடிப் பாதிரிகள் மூலமாகவோ செய்யாதீர்கள். நேரடியாக நீங்களே ஒரு குடும்பத்தைத் தத்தெடுத்து நேரடியாக உங்களின் உதவிகள் அவர்கலுக்கு கிடைக்கும் படிச் செய்யுங்கள். அதுவே பயன் தரும். மற்றபடி ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்தை எடுத்து சுவைக்க நினைக்கும் உளவாளிகளுக்கும், போலிகளுக்கும் நீங்கள் கடினப்பட்டு உழைக்கும் பணத்தை வழங்காதீர்கள். உங்களை நம்பவைக்க பல விதமாய் பேசும் இந்தப் பாதிரியை இனம் கண்டு உங்களின் எதிர்ப்பைப் பதிவு பண்ணுங்கள். அரசியல் ரீதியாக நமக்குள் ஆயிரம் பிளவுகள் இருக்கலாம். ஆனால் இம்மாதிரி சூதாடிகளை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது அப்படி அனுமதுப்பது நாமே நமது மக்களுக்கு கொள்ளி வைப்பது போலாகிவிடும். சமீபத்தில் நக்கீரன் இதழில் களத்தில் நிற்கும் போராளியின் நேர்காணல் என்ற ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மிகவும் இருண்மையான அந்த நேர்காணல் “கேள்வியும் நானே பதிலும் நானே” என்கிற கருணாநிதியின் பாணியில் ஜெகத் கஸ்பரால் எழுதப்பட்டிருக்கலாம். அதில் தான் செய்த துரோகத்தை மறைக்க புலிகள் மீதே பழியைப் போடுகிற திருப்பணியை ஈழக் குரலிலேயே பேசும் அயோக்கியத்தனத்தையும் செய்யத் துவங்கி விட்டார் இந்தப் பாதிரி. அல்லது உண்மையிலேயே ஏதாவது ஒரு ஈழக் குரலிடம் எடுத்திருக்கலாம். ஆனால் அதை நாம் எப்படி நம்புவது. இந்திய உளவுப் படையின், போர் வெறியன் சிதம்பரத்தின் கைக்கூலியாக புலிகளுக்குள் ஊடுறுவி உளவு வேலை பார்த்த இவரிடம் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.

Exit mobile version