அவுஸ்திரேலிய ABC தொலைக்காட்சி ஜூலியன் அசாஞ்ச் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் போலியானவை என நிறுவியுள்ளது. அசாஞ் மீதான போலியாகப் புனையப்பட்ட பாலியல் குற்றங்களுக்கும் அமரிக்காவின் போர்க்குற்றங்களை அசாஞ் அம்பலப்படுத்தியதற்கும் நேரடியான தொடர்புகள் காணப்படுவதாக தொலைக்காட்சி ஆதரங்கங்களுடன் நிரூபித்துள்ளது. ஜூலியன் அசாஞ்சை சுவீடனில் சிறைப்படுத்தி அங்கிருந்து அமரிக்காவிற்கு நாடுகடத்துவதே குற்றச்சாட்டுக்களின் அடிப்படை நோக்கம் என்பதற்கான ஆதரங்கள் இங்கு காணப்படுகிறது.