Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜீ.ரி.வி ஊடகவியலாளர் தினேஷ் எங்கே?

gtvபுலம்பெயர் நாடுகளின் ஊடகங்களை தென்னிந்திய களியாட்ட நிகழ்வுகள் ஆக்கிரமித்து அவற்றைக் கலாச்சாரமாக மாற்றி வருகின்றன. ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் புலம்பெயர் அரசியல், பிழைப்புவாதிகளின் கைகளில் சிக்கிச் சிதைக்கப்படுகின்றது. தமக்கென மக்கள் சார்ந்த அரசியல் தளமற்ற புலம்பெயர் ஊடகங்கள் களியாட்டங்களை தென்னிந்திய சினிமாக் களியாட்டக் கலாச்சாரத்தை உள்வாங்கி வினியோகிக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் ஜீ.ரி.வி என்ற புலம்பெயர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெளிச்சம் என்ற அரசியல் உரையாடல் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிச்சம் நிகழ்ச்சியை நடத்தும் ஊடகவியலாளர் தினேஷ் எந்த நிகழ்ச்சியிலும் தலைகாட்டுவதில்லை. இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக தினேஷிடம் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. வேறு சில மூலங்களிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாதக் கணக்கில் ஜீ,ரி.வி ஊதியம் வழங்காமையினால் தினேஷ் நிகழ்ச்சிகளை நிறுத்திக்கொண்டார் என்று தெரியவருகிறது.

இதேவேளை ஏனைய உல்லாச மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவோர் முறிவின்றி தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். தமது நீண்டகாலப் பணியாளர் ஒருவருக்கு இத் தொலைக்காட்சி ஊதியம் வழங்கவில்லை என்ற தகவல் அவமானகரமானது. இதைத் தவிர சரி தவறு என்பதற்கு அப்பால்,  நடைபெறும் அரசியல் நிகழ்ச்சிகளை தமிழ்த் தேசிய ஊடகம் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் ஜீரீவி புறக்கணிக்க ஆரம்பித்துள்ளது என்பதற்கு இச்சம்பவம் உதராணம்.

அரசியலை விட களியாட்டங்கள் அதிக வருமானம் தரும் நிகழ்வாகிவிட்டது.

Exit mobile version