ஜீ.எஸ்.பி தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இறையாண்மையுடைய நாடு என்ற ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 15 அம்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வரிச் சலுகை இழக்கப்பட்ட போதிலும் நாட்டின் இறைமையை இழக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய தினம் முதல் இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி அறவீடு செய்யப்படவுள்ளது. வரி காரணமாக இலங்கை உற்பத்திகளின் விலைகள் சர்வதேச சந்தையில் உயர்வடையக் கூடுமென பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்ட இழப்பினால் நாட்டின் ஆடைக் கைத்தொழில் உற்பத்தியாளர்களும் ஊழியர்களும் அதிகளவு பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர். இதேவேளை, சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் சந்தர்ப்பம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.