Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜீ.எஸ்.பி சலுகை ரத்து : தெற்காசிய வல்லரசுப் போட்டி

இலங்கைக்கான ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ரத்து செய்வதென ஐரோப்பிய ஒன்றியம் இன்று முடிவு செய்துள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை சரியான முறையில் பதிலளிக்கத் தவறியமையே இதற்கான காரணம் என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வரிச் சலுகைத் திட்ட நீடிப்பு தொடர்பாக பதிலளிக்குமாறு விடுத்த கோரிக்கைகள் தொடர்பாக, இலங்கை மவுனமாக இருந்தது வருத்தமளிப்பதாகவும்,

ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துக்களை இலங்கை அரசாங்கம் நல்ல எண்ணத்துடன் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், வரிச் சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகளை தொடர முடியும் என ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஜீ.எஸ்.பி சலுகை இரத்தைச் சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய அரசு மனித உரிமைப் பிரச்சனையை முன்வைத்து இலங்கை அரசைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றே இச் சலுகை. தெற்காசியப் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்தும் வல்லரசுப் போட்டியின் உச்ச பட்ச விளைவுதான் வன்ன்னிப் படுகொலைகள். இன்றைக்கு வரை இந்தியா தனது அரசியல் நிலைகளை இலங்கையில் வலுப்படுத்தியுள்ளது. இச்சலுகை இரத்தான பின்னர், பங்களாதேஷை நோக்கி இலங்கை உடை உற்பத்தி ஆலைகள் மலிவான கூலியைத் தேடி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version