Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜீஎஸ்பி சலுகையும் இனக்கொலையாளிகளைக் காப்பாற்றும் தெனாபிரிக்க விசாரணையும்

TRCஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி சலுகை இலங்கை அரசாங்கத்திற்கு மீள வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல் பத்து வருடங்களுக்கு இந்த சலுகைத் திட்டம் வழங்கப்பட உள்ளது. குறைந்த மற்றும் குறைந்த மத்திய வருமான ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தின் கீழ் இந்த சலுகைத் திட்டம் வழங்கப்பட உள்ளது. இலங்கை அரசாங்கம் தனது நாட்டை சுரண்டுவதற்கு ஐரோப்பிய அமரிக்க ஏகபோக அரசுகளுக்கு வழியைத் அகலத் திறந்து விட்டமைக்கான சன்மானம் இச் சலுகை. தவிர, ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்தேசிய முதலாளிகள் இலங்கையை ஒட்டச் சுரண்டுவதற்கு இது வழிவகுக்கும். ஐ.நா மனித உரிமை ஆணைக் குழுவில் இலங்கை அரசிற்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதாகக் கூறும் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்க அரசும் அதன் புலம் பெயர் அடிவருடிகளும் ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்கு வெளியில் செயற்பட்டு வருகின்றனர், தென்னாபிரிக்காவில் கோரமான குற்றவாளிகள் தப்பிக்கொள்வதற்கு வழி செய்த போர்க்குற்ற விசாரணை முறைமையை இலங்கையில் நடைமுறைப்படுத்தி இனக் கொலையாளிகளைக் காப்பாற்றும் முயற்சி நடைபெறுகிறது. இதன் பின்புலத்தில் இலங்கை அரசு மற்றும் புலிசார் புலம் பெயர் அமைப்புகள் சிலவும் செயற்படுகின்றன. இச் செயற்பாடுகள் குறித்தும் இதன் பின்புலத்தில் செயற்படும் தனி நபர்கள் குறித்து, தென்னாபிரிக்க போர்குற்ற விசாரணை என்ற கண்துடைப்புக் குறித்தும் இனியொருவில் தொடர்ச்சியாக பதிவுகள் வெளிவரும்.

Exit mobile version