Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜி2 அலைக்கற்றை ஊழல் – ராஜா உட்பட மேலும் சிலர் கைது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, அவரது சகோதரர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளது.

இன்று காலை 4 ஆவது முறையாக டெல்லியில் உள்ள சிபிஐ.அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆ.இராசா கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியா மற்றும் அவரது சகோதரர் கலிய பெருமாள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, இராசாவிடம் கடந்த டிசம்பர் 24,25 ஆம் தேதிகளிலும்,ஜனவரி 31 ஆம் தேதியும் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நான்காவது முறையாக இராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில்,அவரும் அவரது உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராசா தவிர இந்த ஊழலில் தொடர்புடைய இந்திய  ஏகாதிபத்தியப் பங்காளர்களான பெரு முதலாளிகள் கைதுசெய்யப்படவோ விசாரணை செய்யபடவோ இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version