ஏகாதிபத்திய நாடுகளின் ஏக போக கொள்ளை நலனும் தனியார் முதலாளிகளின் வர்த்தக வெறியும் உலகெங்கிலும் ஏழ்மையையும் வறுமையையும் உற்பத்தி செய்திருக்கிறது. உலகெங்கிலும் ஏகாதிபத்திய ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிரான குரல்கள் உயர்ந்து வரும் நிலையில் கனடா தலைநகர் டொரண்டோவில் ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 150 பேர் கைது செய்யப்பட்டனர். ஜி20 அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் டொரண்டோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்நிலையில் இந்தக் கூட்டத்துக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சனிக்கிழமை மாலை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு மாநாட்டு அரங்கை முற்றுகையிட்டனர். அப்பகுதியில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கினர். மாநாட்டில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வதால் அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இதையும் மீறி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முற்பட்ட போலீஸôர் முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீஸôர் மீது தாக்குதல் நடத்தினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தினர். இதையடுத்து கலவரத் தடுப்பு போலீஸôர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்காரர்கள் மீது ரப்பர் குண்டுகளால் சுட்டும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களில் 150 பேரை கைது செய்து அழைத்து சென்றனர்.