Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜார்ஜியா துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல் பதட்டம் அதிகரிக்கும் – ரஷ்யா தளபதி .

26.08.2008.
குழந்தை உணவு, பாட் டிலில் அடைக்கப்பட்ட நீர் ஆகியவைகளை ஏற்றிக் கொண்டு, அமெரிக்க நாச காரில் கப்பல் யு.எஸ்.மக்ஃ பால் ஜார்ஜிய துறைமுகம் பட்டுமி வந்தடைந்தது.

அமெரிக்கக் கப்பல்கள் கருங்கடல் பகுதியில் நட மாடுவது பதட்டமான பகு திகளில் பதட்டத்தை அதி கரிக்கும் என்று ரஷ்ய படைத் தளபதி ஒருவர் கூறி னார். ஜார்ஜிய மக்கள் இன்று முதல் பாதுகாப்பு உணர்வு பெற்றுள்ளனர் என்று ஜார்ஜிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் கேச ரஷ்விலி செய்தியாளர்களி டம் கூறினார். மக்ஃபால் கப்பல் தளத்தில் அமெரிக்க கடற்படையினரை வர வேற்ற போது இவ்வாறு அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டத்தை கூட் டப் போவதாக பிரான்ஸ் அதிபர் சர்கோசி கூறினார். ரஷ்யா தான் அளித்த உறுதிமொழிகளை நிறை வேற்றவில்லையாதலால் இக்கூட்டம் கூட்டப்படுவ தாக அவர் தெரிவித்தார். ஜார்ஜியாவை விட்டு ரஷ்ய துருப்புகள் வெளியேறி விட்டன. சுயாட்சி பிரதே சங்களான தெற்கு ஒசெட் டியா மற்றும் அப்காசியா பகுதிகளில் ரஷ்யா நிலை கொண்டுள்ளது.

1990-ல் சோவியத் யூனி யன் சிதையுண்ட காலத்தில் தெற்கு ஒசெட்டியாவும் அப்காசியாவும் ஜார்ஜியா வுடன் இணைய மறுத்து சுயாட்சி பிரதேசமாகவே உள்ளன. இந்த உண்மையை அமெரிக்காவும், அதன் கூட் டணி நாடுகளும் மறைத்து விட்டதுடன் அவை ஜார் ஜியாவின் பகுதிகள் என்றே கூறி வருகின்றன. இவ்விரு பகுதிகளும் தங்களை இறை யாண்மை கொண்ட நாடுக ளாக அங்கீகரிக்க வேண்டு மென்று ரஷ்யாவிடம் கேட் டுள்ளன.

ஜார்ஜியா வந்துள்ள நாசகாரி கப்பல் ஏராளமான ஆயுதங்கள் பொருத்தப் பட்ட கப்பலாகும். இதில் ஏவுகணைகள், நவீன ராடார்கள் உள்ளன. இதில் இருக்கும் ஏவுகணைகள் அணுகுண்டுகளையும் மரபு ரீதியான குண்டுகளையும் ஏற்றிச் செல்லக்கூடியவை. இக்கப்பலில் அணு ஆயுதம் உள்ளதா என்ற செய்தியா ளர்கள் கேள்விக்கு இல்லை என்று கப்பலின் தலைமை தளபதி கூறினார்.

தெற்கு ஒசெட்டியாவை யும், அப்காசியாவையும் தனிப்பட்ட இரு சுதந்திர நாடுகள் என்று ரஷ்ய நாடாளுமன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனி நாடுகளுக்கான அத் தனை குணாம்சங்களும் அவற்றிடம் உள்ளதால் அவ்விரண்டையும் தனிப் பட்ட இரு சுதந்திர நாடுக ளாக அங்கீகரிக்க வேண்டு மென்று இரு அவைகளும் ரஷ்ய ஜனாதிபதி மெத்வ தேவிடம் பரிந்துரைத் துள்ளன.

Exit mobile version