Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத ​இயக்கத் தலைவர்கள் கைது!

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் முகமது யாசின் மாலிக் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.​ மேலும் பல பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

பிரிவினை கேட்டு போராடும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் ​(ஜே.கே.எல்.எப்.)​ நிறுவனர் முகமது மக்பூல் பட்டின் 26-வது நினைவு தினத்தையொட்டி வியாழக்கிழமை பொதுவேலை நிறுத்தத்திற்கு இவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அபி-குஷார் பகுதியில் போராட்டம் நடத்த இருந்த பஷீர் அகமது பட்,​​ நூர் முகமது உள்ளிட்ட ஜே.கே.எல்.எப்.பின் ஆதரவாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர் என போலீஸôர் தெரிவித்தனர்.

 ஜே.கே.எல்.எப்.​ அமைப்பினர் சராய் பல்லாவில் பேரணி நடத்த இருந்ததையடுத்து அந்தப் பகுதியின் அனைத்து நுழைவு வாயில்களிலும் போலீஸôர் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு அங்கு போராட்டக்காரர்கள் நுழைய முடியாதபடி தடை செய்யப்பட்டது.​ ​

ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர்கள் மிர்வய்ஸ்,​​ உமர் பரூக்,​​ ஆஹா சையத் ஹஸன்,​​ புட்காமி பிலால்,​​ கனிலோன்,​​ ஷாகித் உல் இஸ்லாம்,​​ ஜாபர் அக்பர் ஆகியோரை அவர்களுடைய வீட்டிலேயே போலீஸôர் சிறைவைத்தனர்.

பிரிவானை இயக்கத்தலைவர்களின் ஸ்டிரக் அறிவிப்பால் காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.​ ஆயிரக்கணக்கான போலீஸர் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.​ ​

தேசிய நெடுஞ்சாலைகளின் நுழைவுவாயில்,​​ சுற்றுலாத் தலங்களின் வாயில்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கடைகள்,​​ வியாபார ஸ்தலங்கள்,​​ அரசு அலுவலகங்கள்,​​ வங்கிகள்,​​ நீதிமன்றங்கள்,​​ தனியார் அலுவலகங்கள் ஆகியவை மூடப்பட்டிருந்தன.​ மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.​

Exit mobile version