Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜனாதிபதி மஹிந்த அழைத்தால் பேச்சுக்கு கூட்டமைப்பு தயார்!!!

இனப் பிரச்சினைத் தீர்வு குறித்துப் பேச்சு நடத்த வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அழைப்பு விடுப்பாரானால், அதனைச் சாதகமாகப் பரிசீலிக்கத் தாங்கள் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர் கே.துரைரெத்தினசிங்கம் இத்தகவலை வெளியிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
கடந்த காலங்களில் ஜனாதிபதி எமது கட்சியை அழைத்துத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்துள் ளார். மீண்டும் தமிழ் மக்களின் பிரச்சி னைகளில் நாம் பேசவேண்டிய சந்தர்ப்பம்

வந்தால், அது தொடர்பாகப் பேசுவதற்குத் தயாராகவே உள்ளோம்.
எமது மக்களின் உடனடித் தேவைகள், நீண்டகால அரசியல் பிரச்சினைகள் ஆகி யன தொடர்பாக ஜனாதிபதி, தமிழ்த் தேசி யக் கூட்டமைப்போடு பேசவேண்டும். அது குறித்து உரிய முறையில் அறிவித் தால்  அழைப்பு விடுத்தால்  நாம் நிச் சயம் பேசுவோம்.
ஒரு நிகழ்ச்சித்திட்ட அடிப்படையில் ஒரு பேச்சைத் தொடங்குவதற்கு எப் பொழுதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது  என்றார் அவர்.

Exit mobile version