தற்சமயம் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அரச தொலைக்காட்சி மூலமான ஒளிபரப்புக்களை வடபகுதிக்கு விஸ்தரிப்பில் அரசாங்கம் தீவிர அக்கறை காட்டிவருகிறது.
கொக்காவில் கோபுரப் பணிகள் நிறைவடைய இன்னும் சில காலம் எடுக்கும் என்பதால் பலாலி தொலைத் தொடர்புக் கோபுரம் மூலமாக வடக்கிற்கு ஒளிபரப்பை விஸ்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி கனதெல்ல தெரிவித்தார்.
இதற்கிணங்க இன்று முதல் அரச கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஐரி.என். மற்றும் ரூபாவாஹினி தொலைக்காட்சி சேவைகள் பலாலி தொலைத் தொடர்பு கோபுரத்தின் ஊடாக குடாநாட்டில் ஒளிபரப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இம் மாதம் 26 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களை தொலைக்காட்சி சேவைமூலம் தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த ஒளிபரப்புச் சேவை பலாலி கோபுரம் மூலம் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.