எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்காவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமையவே ஜனவரி 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெறும் என்று தயானந்த திஸாநாயக்கா நேற்று அறிவித்திருக்கிறார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராகத் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்இ எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டியிடவிருக்கின்றமை தெரிந்ததே. அத்துடன் இடதுசாரி முன்னணித்தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவும் தேர்தல் களத்தில் குதித்திக்கவுள்ளார்.
இதேவேளை வடக்கு கிழக்குத் தமிழர் தரப்பு குறிப்பாகஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இன்னமும் விடை கிடைக்காத நிலையில்இ தமிழர் தரப்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாகவும் சில வட்டாரங்களில் ஆராயப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடமும் வேறு சில தமிழ்த் தரப்புகளும் இணைந்து இது தொடர்பாகப் பரிசீலித்து வருகின்றன என்று தெரியவந்தது. எனினும்இ இது தொடர்பாக நேற்று மாலைவரை தமிழர் தரப்பிலிருந்து எந்தவொரு முடிவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.