Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘ஜனநாயக’ லிபியா கொலைக்களமாக மாறியுள்ளது

LIBYAலிபியாவில் கேணல் கடாபியின் அரசை அழித்து ஜனநாயகம் பெரும்திரளான மக்களை கொன்றுகுவித்து ஜனநாயகம் படைத்ததாகக் கூறிய நேட்டோ நாட்டுப்படைகள் இன்று அந்த நாட்டை கொலைக்களமாக மாற்றியுள்ளன. இஸ்லமிய அடிப்படை வாதிகள் உட்பட பல்வேறு ஆயுதக் குழுகள் நேட்டோவின் பொம்மை அரசோடும் தமக்குள்ளும் மோதிக்கொள்கின்றன.
கடாபிக்கு எதிராக மேற்கு ஏகாதிபத்தியங்களை அழைத்துச் சென்ற ஐந்தம் படைக் குழுக்கள் ஆயுத மோதலில் மரணித்துப் போகின்றனர். பிரித்தானிய மற்றும் பிரஞ்சு அரசுகளால் ஆயுதபாணிகளாக்கப்ட்ட அல் கயிதா பிரிகேட் கடந்தவாரம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரையோகம் செய்ததில் 40 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களால் திரிப்பொலி போர்க்களமானது.

மக்களின் போரட்டங்களை எதிர்கொள்ள முடியாத அல்கையிதா பிரிகேட்டின் தலைவர் ஒத்மான் மில்கா என்பவர் தாம் இப்போது தலை நகரை விட்டு வெளியேறி தெற்கு எல்லையை நோக்கி நகர்வதாக செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளார்.
கடாபியை எதிர்த்து ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட மற்றொரு குழுவான சோவேயின் பிரிகேட்டும் தலை நகரை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

லிபிய பிரதமர் மக்கள் மீது ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதலை கண்டிக்கவில்லை. போராட்டக்காரர்கள் ஆயுதக்குழுக்களின் நிலைகளை நெருங்கியமையாலேயே அவர்கள் கொல்லப்பட்டனர் என்று ஊடகங்களுக்குக் கூறினார்.

மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் ஜனநாயகம் என்ற பெயரில் நடத்திய கொலைகளின் பின்னர் தோன்றிய அத்தனை நாடுகளிலும் மக்கள் மரணத்தின் முற்றத்தில் வாழ்கிறார்கள். ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தில் ஏகபோக அரசுகளின் நேரடித் தலையீடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வீரம் செறிந்த போராட்டம் பல்தேசிய வியாபாரிகளுக்கு விலை பேசி விற்பனை செய்யப்படுகிறது. ஈராக்கிலிருந்து லிபியா ஈறாக சிரியா வரைக்கும் கற்றுக்கொண்ட பாடங்களை மக்களிடமிருந்து இனவாதிகள் மறைக்கின்றனர்.

Exit mobile version