Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“ஜனநாயக” அமைப்பின் அமர்வுகளில் மகிந்த

உலகத் தலைவர்கள் “ஜனநாயக” அமைப்பின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச இந்தோனேஷியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்தோனேஷியாவின் பாலித் தீவுகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் பல நாட்டுத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்துவதன் அவசியம் குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாலி தீவுகள் நோக்கி புறப்பட்டுச் சென்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Exit mobile version