Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சோனியா காந்திக்கு அமரிக்க நீதிமன்றம் பிடியாணை : இந்திய அவமானம்

soniaதில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலை தொடர்பான வழக்கில் சிக்கிய தமது கட்சியினரை காப்பாற்ற முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984ஆம் ஆண்டு தில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது சீக்கியர்களுக்கு எதிராக இனப்படுகொலை ஏற்பட்டது.
இனப்படுகொலைல் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக கூறி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது சீக்கியர்களுக்கான நீதி உரிமை பெறும் அமைப்பு (எஸ்.எஃப்.ஜே) மற்றும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 பேர் சார்பில் அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை வழக்கில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில், “”ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்துக்கு, சோனியா காந்திக்கு இப்போது நீதிமன்றம் இந்த சம்மனை அனுப்பியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்தியாவின் முக்கிய தலைவர்கக்ளுள் ஒருவரான சோனியாவிற்கு அமரிக்க்காவின் குட்டி நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்க இந்தியா வல்லரசுக் கனவில் வாழும் எந்ததலைவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதே வழக்கை பிடியாணையை இந்திய நீதிமன்றம் அமரிக்கப் பிரசை ஒருவர் மீது பிறப்பித்தால் ஆயிரம் கண்டனங்கள் எழும். இந்தியாவில் அணியணியாக மக்களைக் கொலைசெய்த போபால் நச்சுவாயுக் கசிவின் முக்கிய குற்றவாளியான கிரிமினல் அன்டர்சன் இந்தியாவிலிருந்து தனது நாடான அமரிக்காவிற்குத் தப்பிச் சென்றார். அண்டர்சனுக்கு இந்தியாவில் இதுவரை பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை. இந்திய அவமானம்.

Exit mobile version