Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சோசலிசம் என்று நம்மால் அழைக்கப்படும் புதிய அமைப்பை நோக்கி செல்லும் பாதையை நாம் உருவாக்கியே தீர வேண்டும்:சாவேஸ்

05.04.2009.

 உலக முதலாளித்துவம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது என்று வெனிசுலா ஜனாதிபதியான ஹியூகோ சாவேஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசுத் தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றுகையில் சாவேஸ் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், முதலாளித்துவமும், அதன் மாண்புகளும்(!) பெரும் நெருக்க
டியில் சிக்கியுள்ளன. இதற்கு அடிப்படையான பொருளாதாரக் கொள்கைகளை உலகம் முழுவதும் திணித்த அமெரிக்காவும்,பிரிட்டனுமே நெருக்கடி ஏற்பட்டதற்கு பெரிய காரணமாகும்.

உலக நிதிஅமைப்பு என்ற வேதாளத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முதலா
ளித்துவத்தால் இயலாது. முதலாளித்துவம் தோல்வியைச் சந்தித்தே ஆக வேண்டும். அது முடிவுக்கு வர வேண்டும். சோசலிசம் என்று நம்மால் அழைக்கப்படும் புதிய அமைப்பை நோக்கி செல்லும் பாதையை நாம் உருவாக்கியே தீர வேண்டும்.

ஐ.எம்.எப்.(பன்னாட்டு நிதியம்) அமைப்பையே கலைத்து விட வேண்டும். புதிய நிதி அமைப்பு உருவாக்கப்படும். இது குறித்து இன்னும் சில நாட்களில் மேற்கொள்ளப்படும் ஜப்பானிய பயணத்தின்போது விவாதிக்க உள்ளேன் என்று சாவேஸ் தெரிவித்தார்.

Exit mobile version