எமது சொந்தக் குடிமக்களை ஒடுக்கும் கருவியாக எம்மைப் பயன்படுத்த முற்படுவீர்களானால் அது ஒரு போதும் நடக்காது என போத்துக்கல் இராணுவ உத்தியோகத்தர்களைப் பிரதிநித்துவம் செய்யும் தொழிற்சங்கம் கூறியுள்ளது. போத்துக்கல் அரசின் சமூக நலத் திட்டங்களைக் குறைக்கும் தொழிலார் விரோத சட்டமூலத்திற்கு எதிராகக் கடந்தவாரம் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.அந்த நாட்டின் வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டமாக அது கருத்தப்பட்டது. சமூக நலத்திட்டங்களுக்காக தொழிலாற்களிடமிருந்து அறவிடப்படும் வரி 11 வீதத்திலிருந்து 18 வீதமாக அதிகரித்த அதே வேளை, முதலாளிகளின் வரியை 23.75 இலிருந்து 18 வீதமாகக் குறைக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்தது.
இதற்கு எதிராக ஒரு மில்லியன் மக்கள் தெருவில் இறங்கிப்போராடினார்கள். ஏனைய நாடுகளைப் போலன்றி போத்துக்கல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் மக்களின் போராட்டங்களுக்கு எதிராக செயற்பட மாட்டோம் என அறிவித்துள்ளது.