1991-1996ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 313ன் கீழ் வாக்குமூலங்கள் அக்டோபர் 20, 21 தேதிகளில் ஜெயலலிதாவிடம் பதிவு செய்யப்பட்டன. 92 சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்ட 1332 கேள்விகள் நீதிமன்றதால் தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் 567 கேள்விகளுக்கு 2 நாளில் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார். மீதமுள்ள 772 கேள்விகளுக்கு பதில் அளிக்க மீண்டும் ஒரு முறை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதிபதி மல்லிகார்ஜுனையா கூறியிருந்தார்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மக்கள் பணம் குறித்த சொத்துக் குவிப்பு வழக்கில் நீதியைச் சந்திக்காது கடத்திவந்த ஜெயலலிதா, இம்மாதம் 22ம் திகதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.