பாரீஸ்:
உலகின் செல்வந்த நாடுக ளில் உள்ள பணக்காரர் களுக்கும் ஏழைகளுக்குமி டையே இடைவெளி அதி கரித்து வருவதாக பொரு ளாதார ஒத்துழைப்பு மற் றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. குறிப் பாக அமெரிக்காவில் இந் நிலை அதிகம் காணப்படு கிறது.
அதிகமான பணம் ஈட்டு வோரின் வருவாய் மலை யென உயர்ந்து வருகிறது. மற்றவர்களின் குறிப்பாக ஏழைகளின் வருவாய் தேக் கம் அடைந்துள்ளது அல் லது வீழ்ச்சி கண்டுள்ளது. செல்வந்தர்களின் இல்லங் கள் குறிப்பாக அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் செழிப்பால் பொங்கி வழிகின்றன. நடுத் தரக் குடும்பங்கள் உள் ளிட்ட மற்றவர்கள் வெகு தொலைவில் பின்தங்கி விட் டனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
பொருளாதார ஒத்து ழைப்பு மற்றும் மேம் பாட்டு அமைப்பு 30 நாடுக ளில் 20 ஆண்டுகள் நடத்திய ஆய்வினை ‘வளரும் சமத் துவமின்மை? ஓஇசிடி நாடு களில் வருவாய் பகிர்வு மற் றும் வறுமை” என்ற தலைப் பில் அறிக்கையாக வெளி யிட்டுள்ளது. ஐரோப்பா வில் உள்ள வளர்ந்த நாடு களில் இந்த ஆய்வுகள் நடத் தப்பட்டன.
சமத்துவமின்மை மற் றும் வறுமைப்பட்டியலில் மெக்சிகோவையும் துருக்கி யையும் விட அமெரிக்கா பின்தங்கியுள்ளது. ஏழைத் தொழிலாளிகள் சம்பள உயர்வு பெற்றதால் பிரான் ஸில் சமத்துவமின்மை குறைந்துள்ளதாக அறிக்கை சொல்கிறது.
அமெரிக்காவில் பத்து சதவீத செல்வந்தர்கள் சரா சரியாக 93 ஆயிரம் டாலர் ஈட்டுகிறார்கள். பத்து சத வீத ஏழைகள் சராசரியாக 5,800 டாலர்கள் சம்பாதிக் கிறார்கள். சமத்துவமின்மை அதிகம் உள்ள அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற் றும் இத்தாலி ஆகிய நாடு களில் சமூக நகர்வுகள் குறைவாக உள்ளன.
மக்கள் கேள்வி
உலக நிதி நெருக்கடி நாடுகளை விழுங்கிக் கொண்டிருக்கும் வேளை யில் சமத்துவமின்மை அதி கரிப்பு அறிக்கை வந்துள் ளது. செல்வந்த நாடுகள் லட்சங்கோடிகளுக்கு மேலான தொகைகளை அள்ளிக் கொடுத்து திவாலாகி வரும் வங்கிகளையும் நிறுவனங் களையும் காப்பாற்றி வரு கின்றன.
இச்சூழலில் மக்களிடம் இயல்பாக எழக்கூடிய கேள்வியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பொருளா தார நிபுணர் அந்தோணி அட்கின்சன் எழுப்புகிறார். “பொருளாதார ஒத்து ழைப்பு மற்றும் மேம் பாட்டு அமைப்பு நாடுகளின் குடிமக்கள் இப்படி எதிர் பார்க்கக் கூடும். வங்கிகளை மீட்பதற்கு அரசுகளால் நிதி கொடுக்க முடிகிறது என் றால் ஆக்கப்பூர்வமான வேலையின்மை காப்பீட் டுத் திட்டத்துக்கு பணம் தர முடியும் அல்லவா? வேலை யில்லாக் கால உதவித் தொகை திட்டத்துக்கும் பணம் திரட்ட முடியும் அல்லவா?”